ADDED : நவ 10, 2026 04:48 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
பத்திரப் பதிவை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இன்று (நவ.,10) பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அந்த வகையில் கடலுார் பத்திரப் பதிவு அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
