ADDED : செப் 09, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, கார்மாங்குடி சுடுகாடு அருகே வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த இருவர், போலீசாரை கண்டதும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி சென்றனர். தலா அரை யூனிட் மணலுடன் இரு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கோ.ஆதனுார் கார்த்திக் (எ) கருப்புசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
