/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மது அருந்த அனுமதி மூவர் மீது வழக்கு
/
மது அருந்த அனுமதி மூவர் மீது வழக்கு
ADDED : மார் 12, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் குமாரசாமி மற்றும் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி தாமரைக்குளம் வீதியில் பெட்டிக்கடை நடத்திவரும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி, ரேவதி மற்றும் அன்பரசி ஆகியோர், மதுகுடிக்க பெட்டிக்கடையில் அனுமதித்தது தெரிய வந்தது.
அதையடுத்து, லட்சுமி உள்ளிட்ட மூவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

