நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொண்டங்குறிச்சி ஆப்ரகாம், 55, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து, டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. அங்கிருந்து 48 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, ஆப்ரகாமை கைது செய்தனர்.

