ADDED : டிச 01, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: புதுச்சேரி மதுபாட்டில் பதுக்கிய தம்பதி மீது வழக்கு பதிந்து கணவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானமாதேவி கோலவிழியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் தமது வீட்டின் பின் பகுதியில், 20 புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.
போலீசார் சக்திவேல், அவரது மனைவி சித்ரா ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்தனர்.
மேலும், சக்திவேலை, 50;கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

