/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்
/
கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்
ADDED : நவ 15, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: கால்நடைத்துறை சார்பில் புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிபள்ளத்தில், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு கால்நடை உதவி இயக்குனர் வேங்கடலட்சுமி தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் நரேந்திரன் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடற்புழு சிகிச்சை, சினை பரிசோதனை சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் சிறந்த கன்று வளர்ப்புக்கும், சிறந்த கிடேரி வளர்ப்புக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கால்நடை ஆய்வாளர்கள் ஜானகிராமன், மோகனபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

