/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோக் அதாலத் ரூ.5.74 கோடிக்கு தீர்வு
/
லோக் அதாலத் ரூ.5.74 கோடிக்கு தீர்வு
ADDED : டிச 14, 2025 06:24 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத் தில், 5 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி (கூடுதல் பொறுப்பு) செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் செளபார்னிகா, ஆர்த்தி, மாஜிஸ்திரேட்டுகள் அரவிந்தன், அன்பழகன் ஆகியோர் மூன்று அமர்வுகளாக வழக்குகளை விசாரித்தனர்.
அதில், மோட்டார் வாகன விபத்து, சிவில், செக் மோசடி, வங்கி வாராக்கடன், அபராதம் உட்பட 351 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 5 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரத்து 788 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவனம் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

