/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதய ரத்த குழாய் அடைப்பு நவீன சிகிச்சை முறை
/
இருதய ரத்த குழாய் அடைப்பு நவீன சிகிச்சை முறை
ADDED : டிச 14, 2025 06:25 AM

கடலுார்: சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனைக்கு ஜப்பானில் இருந்து சிறப்பு மருத்துவ வல்லுனர் குழு வருகை புரிந்து இருதய நோயாளர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளித்தனர்.
ஜப்பானிய இருதய சிறப்பு மருத்துவ வல்லுனர் யசுஸ்கி கோக மற்றும் அவ ரது குழுவினர் சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். நாள்பட்ட 100 சதவீதம் முழு இருதய இரத்த குழாய் அடைப்பை நீக்கும் சிகிச்சை முறையினை விளக்க வருகை புரிந்து, 3 மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை வெற்றிகரமாக நடத்துவதற்கு உடன் இருந்தனர். மேலும் அவர்களின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும், மருத்துமனை டாக்டர்களிடம் பகிர்நது கொண்டனர்.
நம் நாட்டில் அதுவும் கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்வது இதுவே முதல் முறையா கும். சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனை தலைவர் ராஜேந்திரன் வரவேற்று நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். உடன் இருதய சிறப்பு டாக்டர் அருண் பிரசாத், டாக்டர் கிரிதரன் மற்றும் கேத்லேப் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.

