ADDED : ஆக 21, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நெல்மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த குருக்கத்தஞ்சேரியில் நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
அன்று மாலை நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சிறிது துாரம் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழுந்து, அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரி டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். உடன், நெல் மூட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றி, குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
