/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாரி -ஆம்னி பஸ் மோதல்:10 பேர் காயம்
/
லாரி -ஆம்னி பஸ் மோதல்:10 பேர் காயம்
ADDED : ஜூலை 10, 2025 12:41 PM
ராமநத்தம்: ராமநத்தம் அருகே சிமென்் லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூருக்கு நேற்று முன்தினம் இரவு 25 பயணிகளுடன் (டி.என்., 02 பிடி 5774) தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை, சிவகங்கையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 27; ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் அடுத்த வெங்கனூர் அருகே வந்த போது, முன்னால் சென்ற சிமென்ட் லாரி திடீரென பிரேக் போட்டதால், எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் வந்த ஆம்னி பஸ், லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், சென்னையைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி சுமித்ரா, 34, கருப்பண்ணன், 52, சொர்ணநாதன் மனைவி மல்லிகா, 62, காரைக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம், 25 உட்பட 10 பேர் காயமடைந்தனர். அனைவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.