ADDED : டிச 15, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, தென்கோட்டை வீதி கூட்டுறவு வங்கி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ராமச்சந்திரன்பேட்டை ெவங்கடேசன், 41, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரிந்தது.
அவரிடம் இருந்து 1,000 ரொக்கம், இரண்டு மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.