ADDED : ஆக 20, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் சஞ்சிவீராயன் கோவில் பகுதியை சேர்ந்த ஏழுமலை,60; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.