/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுக்கூரைப்பேட்டையில் ஆடம்பர தேர் பவனி
/
புதுக்கூரைப்பேட்டையில் ஆடம்பர தேர் பவனி
ADDED : பிப் 05, 2024 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை புனித காணிக்கை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது.
பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 8:00 மணியளவில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2ம் தேதி காலை 9:00 மணியளவில் சிறப்பு திருப்பலி, இரவு 8:00 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நிகழ்ச்சி நடந்தது. இதில் புனித காணிக்கை அன்னை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக வந்தார்.
அப்போது, ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பங்கு தந்தை அருள்தாஸ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

