/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிவாரணம் கோரி மா.கம்யூ., போராட்டம்
/
நிவாரணம் கோரி மா.கம்யூ., போராட்டம்
ADDED : டிச 22, 2024 08:13 AM

காட்டுமன்னார்கோவில் : மழை வெள்ளத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.5,000 நிவாரணம் வழங்க வற்புறுத்தி, மா.கம்யூ., வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவிலில், கனமழை வெள்ளத்தால் கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடை மாடுகளுக்கு ரூ.40,000, ஆடுகளுக்கு ரூ.20,000, கோழிகளுக்கு ரூ.500 வீதம் அரசு வழங்க கோரி, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட குழு ராமச்சந்திரன், பிரகாஷ், முன்னாள் நிர்வாகி மகாலிங்கம் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
நிர்வாகிகள் பொன்னம்பலம், சிங்காரவேலு, தனபால், சாகுல் அமீது, மணிகண்டன், ரேணுகா, மணிவண்ணன், புஷ்பராஜ், முனுசாமி, பாலமுருகன் தினேஷ், வெற்றிவீரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.