ADDED : பிப் 05, 2025 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; மத்திய அரசை கண்டித்து, திட்டக்குடியில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டக்குடி வட்டக்குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரகாஷ். ராஜேஷ்கண்ணன் வட்டக்குழு உறுப்பினர்கள் பன்னீர், விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு தலைவர் வரதன் வரவேற்றார். நிர்வாகிகள் முத்துலட்சுமி, ஹரிபாபு, மகாலிங்கம், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னதம்பி, மாதர் சங்க வட்ட துணை செயலாளர் சங்கரி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பை கண்டித்தும், விலைவாசி உயர்வு, மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் செயல்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.