
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி ஸ்ரீவெள்ளியம்பல சுவாமிகளின், 159ஆவது ஆண்டு மகா குருபூஜை, கேட்டை நட்சத்திர தினத்தில், நேற்று மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் கோ பூஜையுடன் துவங்கியது.
காலை மகா ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கு பின் பகலில் மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடந்தது.
மாலையில், 108 நெய்விளக்கு தீபமேற்றி கோவிலை வலம் வந்து வழிபாடு நடத்தினர். இரவு 7:00 மணிக்கு மகாதேவா ஆராதனை நடந்தது. அறுசுவை அன்னதானம் வழங்கினர்.

