/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்வசக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
/
சர்வசக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
சர்வசக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
சர்வசக்தி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
ADDED : டிச 05, 2024 05:49 AM

கடலுார்; கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
கடலுார், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி.,நகர் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதனையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜைகளை தொடர்ந்து, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாறறப்பட்டது.
இன்று (5ம் தேதி) காலை 8:00 மணிக்கு விசேஷ சந்தி, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மகா பூர்ணாகுதி நடக்கிறது. 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:25 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11:40 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.