/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாலட்சுமி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது
/
மகாலட்சுமி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது
மகாலட்சுமி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது
மகாலட்சுமி கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது
ADDED : செப் 28, 2024 06:55 AM

கடலுார் : கடலுார் ஸ்ரீமகாலட்சுமி கல்வி நிறுவனங்களில் இந்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்கிறது.
கடலுார் மஞ்சக்குப்பம் மகாலட்சுமி ஐ.டி.ஐ.,யில் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு இலவச ஐ.டி.ஐ., சேர்க்கை நடக்கிறது. இங்கு எலக்ட்ரிஷியன், பிட்டர், எம்.எம்.வி.,-ஏ.சி., மெக்கானிக், ஒயர்மேன், வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஐ.டி.ஐ., சேர்க்கை 30ம் தேதி கடைசி நாள்.
மஞ்சக்குப்பம் மகாலட்சுமி ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்ரிங் கல்லுாரியில், 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு வருட, 3 வருட கேட்ரிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
10வது தேர்ச்சி பெற்றவர்கள் 3 வருட டிப்ளமோ ஓட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்ரிங் டெக்னாலஜி பயிற்சி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பி.எஸ்.சி., டிகிரி இன் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி ஆகிய படிப்புகளில் சேரலாம்.
பூண்டியாங்குப்பம் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில், டி.எம்.இ.,-டி.இ.இ.இ.,-டிப்ளமோ அக்ரி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டி.இ.சி.இ.,-டி.சி.எஸ்.இ., மற்றும் டி.சி.இ., ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது, என, மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தெரிவித்தார்.