ADDED : ஜூலை 25, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை மகா சக்தி மாரியம்மன் கோவிலில் மகோற்சவ விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை, அகரம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு மகோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி மகா சக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம், 22ம் தேதி சக்தி கரகம் புறப்பாடு, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.