/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்து மாரியம்மனுக்கு விமான அலகு நேர்த்திக்கடன்
/
முத்து மாரியம்மனுக்கு விமான அலகு நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 25, 2025 10:51 PM
விருத்தாசலம்,; விருத்தாசலம் மணலுார் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, விமான அலகு அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென்கோட்டைவீதி மோகாம்பரி அம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, காவடி, செடலணிந்து மணிமுக்தாற்றில் இருந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாலாம்பிகை, விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.