/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
/
விருத்தாசலத்தில் மகிளா காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 07, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மகிளா காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அரசி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி துணை தலைவி ஸ்டெல்லா மேரி, பொருளாளர் கலையரசி, ஊடக பிரிவு விஜயலட்சுமி, இணை செயலாளர் கருத்தம்மாள் முன்னிலை வகித்தனர்.
வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் சுபம் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். வட்டார தலைவிகள் சிவக்குமாரி, ரேவதி, முன்னாள் வட்டார தலைவர் கண்ணுசாமி, தொழிலாளர் நலச் சங்கம் ராசப்பன், ஐயப்பன், சந்திரசேகர் உடனிருந்தனர்.

