/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமநத்தம் கள்ள நோட்டு வழக்கு முக்கிய குற்றவாளி சிக்கினார்
/
ராமநத்தம் கள்ள நோட்டு வழக்கு முக்கிய குற்றவாளி சிக்கினார்
ராமநத்தம் கள்ள நோட்டு வழக்கு முக்கிய குற்றவாளி சிக்கினார்
ராமநத்தம் கள்ள நோட்டு வழக்கு முக்கிய குற்றவாளி சிக்கினார்
ADDED : மே 03, 2025 07:00 AM
ராமநத்தம் : கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மாஜி வி.சி., நிர்வாகி உள்ளிட்ட 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்,39; வி.சி.கட்சியின் முன்னாள் நிர்வாகி. வேறு வழக்கு விசாரணைக்காக, அவரை தேடி கடந்த மார்ச் 30ம் தேதி ராமநத்தம் போலீசார், நிலத்தில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கு செல்வம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் கள்ள நோட்டு அச்சடித்து வந்தது தெரிந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்த், 30; கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் சக்திவேல்,26; உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான செல்வம் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வம்,39; வள்ளரசு,25; ஆவட்டி பிரபு,32; பெரம்பலுார் மாவட்டம் பீல்வாடி பெரியசாமி,29; ஆறுமுகம்,30; ஆடுதுறை சூர்யா,25; ஆகிய 6 பேரை பிடித்து நேற்று ராமநத்தம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

