/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயங்காத பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'கூத்து'
/
இயங்காத பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'கூத்து'
இயங்காத பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'கூத்து'
இயங்காத பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'கூத்து'
ADDED : ஜூலை 27, 2025 11:19 PM

நெல்லிக்குப்பம் ; நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்படாத பஸ் நிலையத்தில் ரூபாய் 28 லட்சத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் பணி துவங்கியுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., பஸ் நிலையம் கட்ட 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார்.
கட்டுமான பணிகள் அப்போது முடியவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்றன. அதன்பிறகு பஸ்கள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று செல்கின்றன. பஸ் நிலையம் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
நகராட்சியில் புதியதாக பொறுப்பேற்கும் கமிஷனர்கள் பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என கூறுவதை வழக்கமாக வைத் துள்ளனர்.
ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கா மல் அலட்சியமாக உள்ளனர்.
இதனால், பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில், செயல்படாத பஸ் நிலையத்தில் நகராட்சி அதிகாரிகள் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளனர்.
பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், இவ்வளவு தொகை செலவு செய்து, பராமரிப்பு பணி செய்து வரிப்பணத்தை வீணாக்க வேண்டுமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.