/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவில் சாலை கந்தல் வாகன ஓட்டிகள், பக்தர்கள் கடும் அவதி
/
மலையாண்டவர் கோவில் சாலை கந்தல் வாகன ஓட்டிகள், பக்தர்கள் கடும் அவதி
மலையாண்டவர் கோவில் சாலை கந்தல் வாகன ஓட்டிகள், பக்தர்கள் கடும் அவதி
மலையாண்டவர் கோவில் சாலை கந்தல் வாகன ஓட்டிகள், பக்தர்கள் கடும் அவதி
ADDED : அக் 08, 2024 02:39 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் மலையில் சித்தர்கள் ஜீவசமாதி உள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஆன்மிக பயணமாக வந்து சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் மலை பாதையில் உள்ள தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. இதனால் மலைபாதையில் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் வாகனம் பஞ்சராகிறது. நடந்து செல்லும் பக்தர்களும் அவதியடைகின்றனர்.
கடந்த ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒன்றிய அதிகாரிகள் இந்த மலைப் பாதைக்கு சிமென்ட் சாலை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.