/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முறைகேடு புகார்: அதிகாரிகள் விசாரணை
/
முறைகேடு புகார்: அதிகாரிகள் விசாரணை
ADDED : செப் 21, 2025 11:29 PM
புவனகிரி: போலி ஆவணம் தயாரித்து குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன் பெற்றது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புவனகிரி தாலுகா, வாண்டையான்குப்பம் கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாயவன். மாற்றுத்திறனாளி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்தார்.
இந்நிலையில், சிலர் போலி ஆவணம் தயாரித்து தனது நிலத்தில் தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன் பெற்றதாகவும், போலி ஆவணம் தயாரித்த நபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாயவன், கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித் தார்.
அதனைத் தொடர்ந்து, தாசில்தார் அன்பழகன், சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர், நிலத்தை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.