/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது
/
சிதம்பரத்தில் நாயை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 09, 2025 06:36 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் நாயை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நேரு நகரை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்,30; இவர், வீட்டில் டாபர்மேன் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வளர்ப்பு நாய் வீட்டில் அதிக சத்தத்துடன் குரைத்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட விக்னேஷ் வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர் நாயுடன் தவறாக நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, சிசிடிவி., யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ்,49; என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், நாயுடன் தவறாக நடந்ததும், நாயை பீர் பாட்டிலால் தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.