ADDED : ஜன 01, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்.
இவர் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே உள்ள ேஹாட்டலில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு, கோவில் எதிரே உள்ள பைக் ஸ்டேண்டில் நிறுத்தியிருந்த தனது பைக்கை, எடுக்க சென்றார்.
ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா என்பவர், பிரபாகரனை சரமாரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பிரபாகரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பிரபாகரன் மனைவி பத்மாவதி கொடுத்த புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, இளையராஜாவை கைது செய்தனர்.