UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: இடப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை அடுத்த நக்கரவந்தன்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் பரமேஸ்வரி,38; கனிமொழி. இவர்களுக்குள் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.
இதன் காரணமாக நேற்று (நவ.,5) மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பரமேஸ்வரியை, கனிமொழி மற்றும் அவரது மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து தாக்கி மிரட்டினர்.
புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, அபிஷேக்கை,26; கைது செய்தனர். கனிமொழியை, தேடிவருகின்றனர்.
