ADDED : ஏப் 28, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில், காவலர்கள் ராமச்சந்திரன், தனராஜ் ஆகியோர் கொத்தட்டை டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மொபட்டில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், புதுச்சேரியில் இருந்து 80 பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மொபட் ஓட்டி வந்த கடலுார் முதுநகரை சேர்ந்த செந்தில்குமார், 53; என்பவரை போலீசார் கைது செய்தனர்.