/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தகராறில் கத்திக்குத்து ஒருவர் கைது
/
தகராறில் கத்திக்குத்து ஒருவர் கைது
ADDED : மே 06, 2025 12:30 AM
மந்தாரக்குப்பம், ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் தில்லைராஜன்,51; வடலுார் - சிதம்பரம் மெயின் ரோட்டில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் வடலுார் ராகவேந்திரா சிட்டி நகரை சேர்ந்த ராஜி,53; சில மாதங்களுக்கு முன் 9 லட்சம் ரூபாய் கொடுத்து மினரல் வாட்டர் கம்பெனியை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தில்லைராஜன், ராஜியிடம் 2 லட்சம் ரூபாயை திருப்பி தந்தார். நேற்று முன்தினம் தில்லைராஜன் வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணத்தை ராஜி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அவர், தில்லைராஜனை கத்தியால் குத்தினார். அதில், காயமடைந்த அவர், புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ராஜியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.