ADDED : மார் 19, 2025 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே ஆட்டோவில் ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் வி.கே.டி., சாலையில் நேற்று முன்தினம் இரவு டி.எஸ்.பி., ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் இரு ஆடுகள் இருந்தன.
ஆட்டோ ஒட்டி வந்தவர் பண்ருட்டி திருவதிகை கடலுார் மெயின்ரோடு சேர்ந்த பிரபு, 41; எனவும், காடாம்புலியூர் போலீஸ் சரகம், கீழிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வீட்டில் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரபுவை கைது செய்தனர்.
ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.