தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் மணல் திருடிய ஆசாமி கைது

 ஆற்றில் மணல் திருடிய ஆசாமி கைது

 ஆற்றில் மணல் திருடிய ஆசாமி கைது


ADDED : ஜன 07, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: ஆற்றில் மணல் திருடி மூட்டையில் கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த கொண்டாயிருப்பு நடேசன் மகன் வீரமணி, 46; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் சாக்கு முட்டையில் மணல் எடுத்து பைக்கில் வைத்து கடத்தி சென்று விற்பனை செய்தார்.

தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் மூட்டை கடத்திய வீரமணியை மடக்கி பிடித்தனர்.

போலீசார் வீரமணி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல், பைக் பறிமுதல் செய்யப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us