ADDED : ஜன 20, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புதுகாலனி சீனிவாசன் மகன் சிவக்குமார், 20. தனியார் நிறுவனத்தில் கலெக் ஷன் ஏெஜன்ட். நேற்று அதிகாலை எருமனுார் சாலையில் கலெக் ஷனுக்கு பைக்கில் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, அவ்வழியே பைக்கில் இருவர் வருவதை பார்த்து, அங்கிருந்து தப்பியோடினார்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் மணலுார் கிழக்குத் தெரு ரவிச்சந்திரன் மகன் நவீன், 21, என்பவரை கைது செய்தனர்.

