ADDED : நவ 23, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: குளிக்க வடவாற்றில் இறங்கியவர் நீரில் மூழ்கி இறந்தார்.
கும்பகோணம் சவுராஸ்ட்ரா புதுத்தெருவை சேர்ந்தவர் சரவணன்,50; காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் அர்ச்சகர். இவர் நேற்று (நவ.,22) மாலை துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, குளிப்பதற்காக வடவாறு பாலம் அருகில் உள்ள படித்துறையில் இறங்கியபோது, தவறி ஆற்றில் விழுந்து, சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சரவணன் உடலை மீட்டனர்.
காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
