/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணலுாரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடான அவலம்
/
மணலுாரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடான அவலம்
மணலுாரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடான அவலம்
மணலுாரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடான அவலம்
ADDED : அக் 07, 2024 06:50 AM

விருத்தாசலம்: மணலுாரில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக மாறியதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சி மணலுாரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்படுகிறது. நாளடைவில் வடிகால் துார்ந்து கழிவுநீர் ஆங்காங்கே குடியிருப்புகளுக்கு நடுவே தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுக்கள் அதிகளவு பெருக்கமடைந்து பொது மக்கள் துாங்க முடியாமல் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தொற்று பரவல் காரணமாக குழந்தைகள், முதியோருக்கு காய்ச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
தற்போது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் கலந்து சாலையில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மணலுாரில் வடிகாலை துார்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் சுகாதாரப் பணிகளை முடுக்கிவிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

