/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகத்தீஸ்வரர் கோவிலில் மண்டல அபிேஷக பூர்த்தி விழா
/
அகத்தீஸ்வரர் கோவிலில் மண்டல அபிேஷக பூர்த்தி விழா
ADDED : அக் 24, 2025 03:10 AM
சேத்தியாத்தோப்பு: பரதுாரில் அகத்தீஸ்வரர், அகிலாண்டநாயகி அம்மன் கோவில் மண்டல அபிேஷகம் பூர்த்தி விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதுார் கிராமத்தில் அகத்தீஸ்வரர், அகிலாண்டநாயகி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்தது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டல பூஜை சிறப்பு அபிேஷகம் தீபாரானை, அருட்பிரசாதங்கள் வழங்கி வந்தனர்.
மண்டல பூஜை 48 ஆம் நாள் நிறைவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், அகத்தீஸ்வரர், அகிலாண்டநாயகி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி தீபாரதனையுடன் ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களில் உள்ள புனித நீர் கொண்டு அகத்தீஸ்வரர், அகிலாண்டநாயகி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது.

