ADDED : நவ 05, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளி சாவடி கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் மண்டலபிஷேக பூர்த்தி நிகழ்ச்சி நடந்தது.
காலை கணபதி ஹோமம் தொடங்கி நவக்கிரஹ ஹோமம், சுப்ரமணியருக்கு மூல மந்திர ஆகுதிகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடந்தது.
வள்ளி தேவ சேனா சமேத சுப்ரமணியருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், கலச மகா அபிஷேகம் நடைபெற்று, மகா தீப ஆராதனையும் நடைபெற்றது.
பூஜைகளை சிதம்பரம் சந்திர பாலசுப்பிரமணிய சைவாச்சாரியார் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை கூடு வெளி சாவடி கிராம மக்கள் செய்திருந்தனர். நிகழ்வையொட்டி பக்தர்களுக்கு விழாவில் அன்னதானம் நடந்தது.

