/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை
ADDED : அக் 16, 2025 11:43 PM

கடலுார்: கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த ஆக. 28ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது. மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை மகா கும்ப பூஜைகள், ஆஞ்சநேயர் காயத்ரி ேஹாமம், ஆஞ்சநேய சகஸ்ரநாம ேஹாமம், மண்டாலபிஷேக சாந்தி பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து, மூலவர், உற்சவர் திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் சரவணரூபன், செயல் அலுவலர் ஞானசுந்தரம், தேவநாதன் பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.