ADDED : பிப் 24, 2024 06:25 AM

சிதம்பரம் : திருச்சியில் தியாகராஜபாகவதருக்கு முழு உருவ சிலையுடன் கூடிய, மணிமண்டபம் திறக்க உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாநில தலைவர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழிசை மன்னர் என போற்றப்படும் தியாகராஜ பாகவதருக்கு முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைதது,
முகப்பில் அவரது பெயருக்கு முன் 'ஏழிசை மன்னர்' என்ற அடைமொழி பொறிக்கவும் விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் மற்றும் ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரு, சுவாமிநாதன் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.
அதனை தொடர்ந்து திருச்சியில் ஏழிசை மன்னருக்கு மணிமண்டபம் கட்டவும், தியாகராஜ பாகவதர் பெயருக்கு முன் 'ஏழிசை மன்னர்' என்ற வரலாற்று சிறப்பு மிக்க அடையாள மொழி பொறிக்க உத்தரவிட்டதோடு, வரும் 27 ம் தேதி தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தை, திருச்சியில், முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக தமிழக முதல்வருக்கு விஸ்வகர்ம சமூக மக்களின் சார்பாக இதயபூர்வமான நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் வரும் 27 ம் தேதி அன்று திருச்சியில் நடைபெறும் இவ்விழாவில் விஸ்வகர்ம சமூக மக்கள் பெருந்திரளாக கூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.