ADDED : டிச 06, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் சுற்றுப்பகுதியில் வேர்கடலை பயிரிடும் பணி துவங்கியுள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, வில்லியநல்லுார், சேந்திரக்கிள்ளை, வல்லம், சிலம்பி மங்களம், பெரியப்பட்டு, அத்தியாநல்லுார், கொத்தட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் புஞ்சை நிலங்களில் ஆண்டுதோறும் கார்த்திகை பட்டத்தில், மணிலா பயிரிடுவது வழக்கம்.
அதையொட்டி இந்தாண்டு தொடர் மழை பெய்ததால், இப்பகுதி விவசாயிகளுக்கு மணிலா பயிரிட ஆர்வம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, இயற்கை உரங்களான கால்நடை கழிவுகளை தெளித்து சமன் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மணிலா பயிரிடும் பணியில், இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

