/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மஞ்சக்குப்பம் அரசு பள்ளி ஆண்டு விழா
/
மஞ்சக்குப்பம் அரசு பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 05, 2025 06:18 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில், மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை செந்தாமரைச்செல்வி வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மணாவிகள் மற்றும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கலைசெழியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், கல்வியாளர் சண்முகம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.