/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் ஜன. 5ம் தேதி மாரத்தான் ஓட்டம்
/
கடலுாரில் ஜன. 5ம் தேதி மாரத்தான் ஓட்டம்
ADDED : ஜன 02, 2025 06:40 AM
கடலுார்; கடலுாரில், அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, வரும் 5ம் தேதி மாரத்தான் போட்டி 2024 நடக்கிறது.
கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜன., 5ம் தேதி, காலை 7:00 மணிக்கு கடலுார் சாவடி அக் ஷரா வித்யாஸ்ரமம் பள்ளியில் இருந்து போட்டு துவங்குகிறது. முதல் 10 இடங்களை பெற்று வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
17வயது முதல் 25வயதிற்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ., மகளிருக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 10 கி.மீ., மகளிருக்கு 5 கி.மீ., பந்தய துாரமாக இருக்கும். போட்டியில் பங்கேற்க விருப்புவோர், வயது சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் கொண்டு வரவேண்டும்.
போட்டி துவங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே போட்டி துவங்கும் இடத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள், ஜன., 4ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

