/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்றைய தலைமுறைக்கு தற்காப்புக் கலை முக்கியம் டேக்வாண்டோ பயிற்சியாளர் செந்தில்முருகன் பளீச்
/
இன்றைய தலைமுறைக்கு தற்காப்புக் கலை முக்கியம் டேக்வாண்டோ பயிற்சியாளர் செந்தில்முருகன் பளீச்
இன்றைய தலைமுறைக்கு தற்காப்புக் கலை முக்கியம் டேக்வாண்டோ பயிற்சியாளர் செந்தில்முருகன் பளீச்
இன்றைய தலைமுறைக்கு தற்காப்புக் கலை முக்கியம் டேக்வாண்டோ பயிற்சியாளர் செந்தில்முருகன் பளீச்
ADDED : அக் 01, 2025 11:18 PM

விருத்தாசலம்: தற்காப்புக்கலை பயில்வது இன்றைய தலைமுறைக்கு இன்றியமையாதது' என டேக்வாண்டோ பயிற்சியாளர் செந்தில்குமார் கூறினார்.
விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையில் இயங்கும் 'தமிழன் தற்காப்புக்கலை பயிற்சிப் பள்ளி பயிற்சியாளர், மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்க பொருளாளர், தற்காப்புக்கலை பயிற்சி தேசிய நடுவர் செந்தில்முருகன் கூறியதாவது:
இன்றயை மாணவர்கள், இளம் தலைமுறையினர் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்திட தற்காப்புக்கலை அவசியம். யாருடைய துணையும் இன்றி, எந்த நேரத்திலும் பயணப்பட இது உதவுகிறது. இன்றயை தலைமுறைக்கு தற்காப்புக்கலை இன்றியமையாதது. குறிப்பாக பெண்கள் தற்காப்புக்கலை பயில்வது அவசியமாகும்.
கடந்த 2003ம் ஆண்டு ரெயின்போ டேக்வாண்டோ கிளப் துவங்கி, 2007ல் முத்துவள்ளல் நவநீதம் மகாலில் முதன் முறையாக மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியை நடத்தினேன். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை பெற்றனர். அதில், ரெயின்போ டேக்வாண்டோ கிளப் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.
இதற்கு பின் இன்ஃபேண்ட் பள்ளி துவங்கி 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற துவங்கினர். 2017ல் தேசிய அளவிலான போட்டியில், எனது பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 4 பேர் பங்கேற்று, 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.
விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையில் கே.பி.எம்., வாசகன் மகாலில், சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ பயிற்சி வகுப்புகளை துவங்கினேன். அப்போது, ரெயின்போ டேக்வாண்டோ கிளப், 'தமிழன் தற்காப்புக்கலை பயிற்சிப் பள்ளி' என மாற்றம் பெற்றது.
பள்ளி தலைவராக மணிவாசகன், துணைத் தலைவராக தங்கமணி, செயலாளராக மாஸ்டர் செந்தில்முருகன், பொருளாளராக இனியகார்த்திக் பொறுப்பேற்று, மாணவர்களை வழிநடத்தி வருகிறோம். மாவட்ட அளவிலான இன்டர் கிளப் டேக்வாண்டோ போட்டியில், தமிழன் தற்காப்புக்கலை பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 143 பேர் பங்கேற்று, பதக்கங்களை குவித்து, முதலிம் பெற்றோம்.
பின்னர், 2023ல் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த 3வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மூன்றாமிடம் கிடைத்தது. பின் திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான போட்டியில், வெண்கல பதக்கம் வென்றோம்.
மேலும், 2023ல் 4வது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தோம். 2023ல் திருவாரூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றனர். 2024ல், 2வது மாவட்ட அளவிலான இன்டர் கிளப் போட்டியில், முதலிடம் பிடித்தனர்.
2025ல் கடலுாரில் நடந்த 5வது மாவட்ட அளவிலான போட்டியில் சிறந்த அணிக்கான ஆக்டிவ் பர்பாமன்ஸ் பெற்றோம். 2024ல் திருச்சியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 1 வெண்கலம் பிடித்தோம்.
2025ல், சிதம்பரத்தில் நடந்த சாதனை தமிழர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை நிகழ்ச்சியில், நமது கிளப் மாணவர்கள் 9 பேர் பங்கேற்று, பரிசு, கேடயம் பெற்றனர். பின்னர் புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில், பல்வேறு பரிசுகள் பெற்றனர். விருத்தாசலத்தில் நடந்த 6வது மாவட்ட அளவிலான போட்டியில், 3வது இடம் கிடைத்தது.
திருவாரூரில் நடந்த மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில், 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என பதக்கங்களை குவித்த நமது மாணவர்கள், சிறியோருக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். நமது பள்ளியில் 3 வயது முதலான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளாக் பெல்ட் பயிற்சி முடித்துள்ளனர்.
தற்காப்புக்கலையில் இளம் தலைமுறையினரை புகுத்தி அவர்கள், தேசிய அளவிலான சாதனைகளை புரிய வைப்பதே எனது நோக்கம்.
இவ்வாறு, அவர் கூறினார்.