
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேர் உற்சவம் நடந்தது.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்பிரகார உலா நடக்கிறது. 9ம் நாளான நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. தேவநாதசாமி சமேத ஸ்ரீதேவி பூதேவி, திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கோவில் உட்பிரகாரத்தில் தேர் உலா நடந்தது.