ADDED : ஏப் 04, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் எம்.ஜி.ஆர்., சிலம்ப பயிற்சி பள்ளி மற்றும் சிதம்பரம் வைப்ஸ் சார்பில், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிலம்ப பயிற்சி பள்ளி நிறுவனர் உத்திராபதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் செந்தில் வேலன் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகளின் அவசியம் குறித்து பேசினார்.
விரிவுரையாளர் ரமேஷ் ஆகாஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தற்காப்பு கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நாள் பயிற்சியாக சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

