/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆழத்து விநாயகர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்
/
ஆழத்து விநாயகர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்
ADDED : பிப் 06, 2024 04:21 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி, ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
அன்று காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. 11:50 மணிக்கு ஆழத்து விநாகயர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார்.
அதன்பின், சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து, கொடியேற்றினர். இரவு சாமி வீதியுலா நடந்தது.
வரும் 15ம் தேதி விருத்தாம்பிகை பாலம்பிகை சமேத விருத்தகிரீஸ்ரவர் சுவாமிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
பிப்., 20ம் தேதி 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேர் திருவிழா, 24ம் தேதி மாசி மகம், 25ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.