/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
/
மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு
ADDED : மார் 02, 2026 03:24 AM

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினத்தில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணையும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படும். கோவில்களிலும் நீர் நிலை இருக்கும் பகுதிகளிலும் இந்த விழா நடைபெறும். நீர் நிலைகளில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் நாளாக இது கருதப்படுகிறது. கடலுார், நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆன்மிக மரபுகளின் படி, முப்பத்தி மூக்கோடி தேவர்களும் பூமியில் வந்து பக்தர்களை ஆசி வழங்குவார்கள். கடலுார, தேவனாம்பட்டினம் கடற்கரையில் இன்று மாசிமகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து, தீர்த்தவாரி நடக்கிறது. இதனை முன்னிட்டு போலீசார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, கூட்டத்தை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

