sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் மாதர் நல தொண்டு நிறுவனம்

/

பெண்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் மாதர் நல தொண்டு நிறுவனம்

பெண்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் மாதர் நல தொண்டு நிறுவனம்

பெண்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் மாதர் நல தொண்டு நிறுவனம்


ADDED : அக் 11, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாதர் நல தொண்டு நிறுவனம் (எம்.என்.டி.என்) கடந்த 1981ம் ஆண்டுபெருமாள் என்பவரால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஏழை, எளிய மக்களுக்குதரமான கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் கிடைக்க பாடுபடுகிறது. இவரதுமகன் ராஜேந்திரன் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சமுதாய பணிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக, பெண்கள் நலன், முதியோர் நலன், குழந்தைகளின்கல்வி நலன், இளைஞர்கள் மற்றும் வளர் இளம்பெண்கள் நலன், ஆதரவற்ற பெண்கள் நலனுக்காக பாடுபடுகிறார். இவரின் சேவையை பாராட்டி கடந்த 2000ம்ஆண்டு தமிழ்நாடு அரசு சிறந்த தொண்டு நிறுவன விருதை வழங்கியது. இந்நிறுவனம் நடத்தி வரும் அன்னை அலமேலு முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற, சமூகத்தினரால் கைவிடப்பட்ட 25 முதியோர்களுக்குஇலவச உணவு, உடை, தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்துள்ளது. பாதிக்கப்பட்டபெண்கள் தங்கும் இல்லத்தில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட 30 பேர் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஆலோசனை வழங்கி குடும்பத்துடன் சேர்க்கப்படுகின்றனர். நடமாடும் மருத்துவ முகாம் மூலமாக 60 வயதிற்கு மேற்பட்ட 400 முதியோர்களை 10 கிராமங்களில் கண்டறிந்துவீட்டிற்கே சென்று மாதந்தோறும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இந்நிறுவனம் நடத்தி வரும் மது, போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்குமது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து வரவழைத்து சிறந்தமுறையில் மருத்துவம், ஆலோசனை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்த நிலை

பல்கலைக் கழகம் மூலமாக பள்ளியில் தோல்வியடைந்த மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பு, பட்டய படிப்பிற்கான கல்வியை முடிக்க வழி வகை செய்கிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு தொழில் முனைவோருக்கு வங்கி கடன் பெற்று வருமானம் பெருக்கிக் கொள்ள ஏற்பாடு செய்கிறது.






      Dinamalar
      Follow us