ADDED : மே 02, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது.
மண்டல செயலாளர் நவநீதக்கண்ணன் தலைமை தாங்கினார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் குமார், பகுதி செயலாளர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுந்தர்ராஜன், மண்டல துணை செயலாளர் நடராஜன், பணிமனை-1 செயலாளர் பாலமுருகன், தலைவர் கதிர்வேல், பொருளாளர் ஜோதி, பனிமனை-2 தலைவர் ரவிச்சந்திரன், பரஞ்சோதி, இணை செயலாளர்கள் மணிகண்டன், சிவராஜ், கலியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, முத்துக்குமரன் பங்கேற்றனர்.

