ADDED : ஆக 04, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுாரில் ம.தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பிச்சை தலைமை தாங்கினார். பொருளாளர் செந்திலதிபன் பேசினார். துணை பொது செயலாளர் மணி, கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன், பாண்டுரங்கன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவராமன் பங்கேற்றனர்.
திருச்சியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா மாநாடு, ம.தி.முக., சார்பில் நடக்கிறது. இதனை முன்னிட்டு நெய்வேலியில் வரும் 14ம் தேதி நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுச் செயலாளர் வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. மணிகண்டன் நன்றி கூறினார்.